ராமதாஸ் கொடுத்த அப்படி ஒரு ஐடியா... பாஜக கூட்டணியில் இருந்தே நீட் ஒழிப்பு - பாமக வாக்குறுதி..! -அன்புமணி, ராமதாஸ் விளக்கம்

Update: 2024-03-27 16:11 GMT

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்பது உள்பட பல்வேறு உத்தரவாதங்களை பாமக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டார். Card-2 அதில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உறுதி செய்யப்படும், Card-3 அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படும், Card-4 தனியார் துறை, நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும், Card-5 தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதிகளை பாமக அளித்துள்ளது. Card-6 இது தவிர, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தடுக்கப்படும், Card-7 தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறப்படும், Card-8 சென்னையில் உச்சநீதிமன்ற கிளை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும், Card-9 மத்திய அரசில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், Card-10 நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்றும் Card-11 வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்