ஹை ஸ்பாட் இடத்தில் திடீரென களமிறங்கிய போலீஸ் - தலை தெறிக்க ஓடிய மக்கள் - பரபரப்பு காட்சிகள்

Update: 2025-01-08 02:40 GMT

திருவிடைமருதூரில், டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற திடீர் வாகன சோதனையில், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கும்பகோணம் - திருவிடைமருதூர் சாலையில், தலைக்கவசம் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல், உரிய ஆவணங்கள் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜு தலைமையில், கும்பகோணம் - திருவிடைமருதூர் சாலையில் புறவழிச்சாலை சந்திக்கும் இடத்தில் ஏராளமான போலீசார் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள், சீட் பெல்ட் அணியாமலும், செல்போன் பேசிக்கொண்டும் கார்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்தனர். கூட்டம் கூட்டமாக போலீசாரிடம் சிக்குவதை பார்த்த சிலர், காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க, சாலையில் இருபுறமும் தலை தெறிக்க சென்றனர். எனினும், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். திடீர் வாகன சோதனையால் கும்பகோணம் - திருவிடைமருதூர் சாலை பரபரப்பாக மாறியது.

Tags:    

மேலும் செய்திகள்