ஸ்கூல் பஸ் மீது விழுந்த 100 ஆண்டுகள் பழமையான மரம்.. உள்ளே இருந்த 40 குழந்தைகள் நிலை?
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், 100 ஆண்டுகள் பழமையான மரம் பள்ளி வாகனத்தின் மீது முறிந்து விழுந்த விபத்தில், நல்வாய்ப்பாக 40 மாணவர்கள் உயிர் தப்பினர். கடந்த சில நாட்களாக சாலையோரம் சாய்ந்து காணப்பட்ட புளியமரத்தை அகற்றுவதற்காக, ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் மாற்றி விடப்பட்டன. அப்போது மரத்தின் ஒரு பகுதி, அவ்வழியாக சென்ற பள்ளி வாகனத்தின் மீது திடீரென விழுந்தது. இதில், மாணவ, மாணவிகள் உயிர் தப்பிய நிலையில், விரைந்து சென்ற போலீசார் மாணவர்களை மீட்டு, மரத்தினை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டதுடன், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் ஒரு ஆட்டோ, 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.