கிருஷ்ணகிரியில் கொள்முதல் விலை சரிவால் கரும்புகளை அறுவடை செய்யாத விவசாயிகள், அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்தாண்டு பொங்கலின் போது, ஒரு ஜோடி கரும்பு 40 முதல் 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு விளைச்சல் அதிகரிப்பால் ஜோடி கரும்பு 20 முதல் 25 ரூபாய்க்கு மட்டுமே விலை போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவு செய்த நிலையில், விலை குறைவால் கரும்புகளை அறுவடை செய்யாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.