பூஜையில் இஸ்லாமிய பாடல் பாடி மகிழ்ந்த ஐயப்ப பக்தர்கள் - வைரலாகும் வீடியோ
கிருஷ்ணகிரியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை மிலாடி நபி விழாக்குழு சார்பில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு கொட்டாவூர் கிராமத்தில் நடந்த ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜையில், மிலாடி நபி விழாக்குழு தலைவர், அஸ்லம் ரஹ்மான் ஷெரிப் தலைமையில் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இஸ்லாமியர்களை போற்றும் வகையில் ஐயப்பன் பாடல் வடிவில், இஸ்லாமியர்களுக்கான பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து, இஸ்லாமியர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர்.