`இந்த திட்டத்தை கைவிட வேண்டும்'.. கொதித்தெழுந்து பேசிய பெண் - கோவையில் பரபரப்பு
கோவை சூலூர் அருகே இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி வரை எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து ஆறு நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அப்போது பேசிய விவசாயிகள், குழாய் பதிக்கும் பணியை நிறுத்தாவிட்டால், பதிக்கப்பட்ட குழாய்களை மண்வெட்டிகளை கொண்டு வெட்டி எடுப்போம் என்று கூறினர். முடிந்தால் தடுத்து பாருங்கள் என விவசாயிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.