ஒரே பெண்.. மூடப்பட்ட அரசு ஹாஸ்பிடலின் ஒரு பாகம் - அதிர்ந்து போன மக்கள் | Govt Hospital | Kovai
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசுமருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் சி டி ஸ்கேன் மையத்தில் ஒரே ஒரு பெண் டெக்னீசியன் மட்டும் பணியாற்றி வருகிறார். மாற்று ஊழியர் இல்லை என்பதால் அவர் விடுப்பு எடுக்கும் போதெல்லாம் சிடி ஸ்கேன் மையம் மூடப்படும். இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில் சி.டி.ஸ்கேன் செய்யும் டெக்னீசியனுக்கு உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்கேன் மையம் விடுமுறை எழுதப்பட்ட துண்டு பிரசுரத்தை அவர் கதவில் ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் எடுக்க வந்த ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர்.