கோடநாடு கொலை வழக்கு.. கோவை சிபிசிஐடி நீதிமன்றத்தில் சஜீவன் ஆஜர்

Update: 2024-11-28 13:56 GMT

நீலகிரி மாவட்டம், கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சயான் மற்றும் அவரது கூட்டாளிகள் கேரளாவுக்கு தப்பி சென்றபோது, அவர்களை விடுவிக்குமாறு போலீசாரிடம் சஜீவன் தொலைபேசியில் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலிசார் , வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் அவரது கூட்டாளிகளை விடுவிக்க சொன்னது குறித்து விசாரிப்பதற்காக நவம்பர் 5-ம் தேதி ஆஜராகுமாறு சஜீவனுக்கு சம்மன் அளித்தனர். ஆனால், அவர் ஆஜராகாத நிலையில் மீண்டும் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சஜீவன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்