"சிதைந்து போன வீடு..!" யோசிக்கலாம் உடனே உறுதியளித்த அமைச்சர் | DMK

Update: 2024-11-28 15:29 GMT

விருதுநகர் மாவட்டம் வேலாயுதபுரம் கிராமத்தில் சிதிலமடைந்த வீட்டில் வசித்து வரும் பெண்ணிற்கு 'கலைஞர் கனவுத் திட்டத்தின்' கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்ட நிலையில், அவரிடம் ராணி என்பவர் தாம் வசித்து வரும் வீடு மிகவும் சேதமடைந்து உள்ளதால் தனக்கு உதவும்படி கேட்டு கொண்டார். இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக அந்த வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். உடனே கலைஞர் கனவுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வீடு வழங்கும் படி பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்