ஹாஸ்பிடலில்... காவலாளியை தாக்கிய பெண்... கொதித்தெழுந்த சக ஊழியர்கள்... பரபரப்பு காட்சி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவலாளியை தாக்கியதாக கூறி, சக காவலாளிகள் மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகள் நலப் பிரிவில் சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அங்கு வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த உலகநாயகி என்பவர் தனது உறவினரை பார்க்க வந்துள்ளார். அப்போது செக்யூரிட்டி மாரியம்மாள் பார்வையாளர் நேரத்தை தவிர மற்ற நேரத்தில் வரக்கூடாது எனக் கூறியதால், ஆத்திரமடைந்த உலகநாயகி, மாரியம்மாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100க்கு மேற்பட்டோர் காவலாளிகள் ஒன்று திரண்டு, அவரை தாக்க முற்பட்டனர். ஒரு கட்டத்தில், பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.