திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள், முற்றிலும் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், பழுதடைந்த வீடுகளிலேயே மக்கள் அவதியுடன் வசித்து வருகின்றனர். ஏற்கனவே 12-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக பழுதடைந்த வீடுகளில் உள்ளவர்களை அருகேயுள்ள அரசுப்பள்ளி கட்டிடத்தில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.