கடைசியாக மனைவியிடம் பேசிவிட்டு உயிரோடு கருகிய கணவன் - "அப்பாவ கேட்டா புள்ளகிட்ட என்ன சொல்லுவேன்"

Update: 2024-11-15 06:35 GMT

பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில், பேருந்து ஒன்றுக்கு தொழிலாளர்கள் கூண்டு கட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்ததும், தீக்குள் சிக்கி போராடிய தொழிலாளர்களில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்திருப்பதும் மனதை பதற வைத்திருக்கிறது.

கரூரில் இயங்கி வரும் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில்தான் மனதை பதைபதைக்கச் செய்யும் இந்த கோரச் சம்பவம் அரங்கேறி இருக்கிறது...

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை பகுதியில் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் இந்த தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது...

இதில், சம்பவத்தன்று பேருந்து ஒன்றிற்கான கூண்டை கட்டி முடித்து அதன் இறுதி கட்டப் பணியாக வெல்டிங் வைக்கும் வேலைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்..

இந்த வெல்டிங் பணியில், எதிர்பாராதவிதமாக தீ பொறி பட்டு திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது..

பதறிப்போய் அலறியடித்துக் கொண்டு தொழிலாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக பேருந்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர்..

இதில், செல்லாண்டிபட்டி கிராமத்தை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற வெல்டர் பேருந்தின் உள்ளே சிக்கி கொண்டதில், தீக்கிரையாகி உடல் கருகி உயிரிழந்ததும் மனதை கதிகலங்க செய்திருக்கிறது...

தகவலறிந்து விரைந்த கரூர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்..

இதில், பேருந்து கதவின் அருகே உடல் எரிந்த நிலையில் இருந்த தொழிலாளி ரவிச்சந்திரன் உடல் இருந்தது மனதை பதற செய்திருக்கிறது. மேலும், சில தொழிலாளர்கள் தீ விபத்தில் சிக்கி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மனதை பதைபதைக்க செய்யும் இந்த விபத்து குறித்தும், உயிர் பலி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்