AC-ஐ ஆன் செய்ததும் பரவிய விஷம் - மயங்கி துடித்து உயிர்விட்ட பிள்ளைகள் - எங்கே நடந்தது தவறு?

Update: 2024-11-15 08:13 GMT

AC-ஐ ஆன் செய்ததும் கொஞ்சம் கொஞ்சமாக பரவிய விஷம் - மயங்கி உயிர்விட்ட குழந்தைகள் - இதுவரை யாரும் கேள்விபடாத சென்னை பயங்கரம்... எங்கே நடந்தது தவறு? உஷார் மக்களே

வீட்டில் இருந்த எலிகளை அழிக்க வைக்கப்பட்ட மருந்து குழந்தைகள் இருவரின் உயிரை பறித்திருக்கிறது. அவர்களின் பெற்றோரின் உயிரையும் ஊசலாட வைத்திருக்கும் நிலையில், தனியார் நிறுவனத்தின் அஜாக்கிரதையால் நேர்ந்த விபரீதத்தின் விளைவுதான் இது என்கிறார் நிபுணர் ஒருவர்.. பார்க்கலாம் விரிவாக...

சென்னை, குன்றத்தூரில் அரங்கேறி இருக்கும் கோரத்தின் உச்சம்தான் இந்த சம்பவம்.. புதிதாக குடியேறிய வீட்டில், தொல்லை கொடுத்து வந்த எலிகளை அழிக்க பெஸ்ட் கண்ட்ரோல் என்ற தனியார் நிறுவனத்தை அழைத்த தம்பதி, இறுதியில் தங்களின் இரு குழந்தைகளையும் இழந்து உயிருக்கு போராடி வருகின்றனர்...

எலி பேடை வைத்துதான் தாங்கள் எலிகளை பிடித்து வரும் நிலையில், சம்பவம் நடந்த வீட்டில் கெமிக்கலோ அல்லது பவுடரோ பயன்படுத்தியிருக்க கூடாது என எச்சரிக்கும் இவர், அப்படி பயன்படுத்தினால் ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள் வரக்கூடாது என்கிறார்..

தம்பதியையும், அவர்களின் குழந்தைகளையும் ஏசி மூலம் அந்த விஷ நெடி சுவாசத்தில் கலந்து தாக்கியிருப்பதாக தெரிகிறது. உடனே, தண்ணீர் குடித்து வாந்தி எடுத்தால் சரியாக வேண்டியது, தாமதமானதால் உயிர் பறிபோயிருப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

அத்தனையும், சர்வீஸூக்கு வந்தவர்களின் அஜாக்கிரதையால் நேர்ந்திருப்பதாக தெரிவித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்