கர்நாடக CM முன் 6 நக்சல்கள் சரண் | Karnataka

Update: 2025-01-09 08:30 GMT

கர்நாடக மாநிலத்தில், நக்சல் இயக்கத்தை சேர்ந்த 6 பேர் முதலமைச்சர் சித்தராமையா முன்பு சரணடைந்தனர்.

முண்டகரு லதா, சுந்தரி குத்லூர், வனஜாக்ஷி பலேஹோல், ஜெயண்ணா அரோலி, வசந்த் ஆற்காடு, ஜிஷா மக்கிமாலா ஆகியோர் சரணடைந்தனர். இது மாநிலத்தில் நக்சல் போராட்ட பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தாங்கள் ஜனநாயக சமூகத்தில் இணைந்து மக்களுக்காக வாழ நினைப்பதாகவும், அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். சரணடைந்தவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், அவர்களது மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்