தமிழகத்தின் அடுத்த தலைமுறைக்கு சொத்து தேடி சேர்த்து வைத்த நபர் - யாருக்கும் கிடைக்காத அரிய பொக்கிஷங்கள்
காரைக்குடியில் பொம்மைக் காதலன் என்ற பெயரில் பழமையான பொருள்கள் அடங்கிய மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது...சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன்... பழமையான பொருள்களைச் சேகரிப்பதில் அலாதி ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டின் அருகிலேயே துவங்கியுள்ள "பொம்மை காதலன் அருங்காட்சியகத்தில்" 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சேமித்த பொருள்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன... கேமராக்கள், கிராம போன்கள், சைக்கிள், இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள், லேண்ட் லைன் போன்கள், செல்போன்கள், பல கால கட்டங்களில் வந்த செய்தித் தாள்கள், வார, மாத இதழ்கள், ஸ்டாம்ப்புகள், நாணயங்கள் என இவரது சேகரிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்... சுற்றுலா பயணிகள், மாணவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.. உள்ளூர் பார்வையாளர்களுக்கு 100 ரூபாயும், வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு 10 டாலரும், அடையாள அட்டையுடன் வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றியும் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்... மகாதேவன் கொடைக்கானலிலும் இதே போன்ற அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது குறிப்பிடதக்கது...