காரில் வந்த 4 இளைஞர்கள் 1 பெண்.. ஆதாரம் கேட்டதும் ஆவேசமான கும்பல்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ

Update: 2024-04-25 02:14 GMT

ஒரு பெண்ணோடு குமரி வந்த 4 கேரளா இளைஞரின் காரை மறித்து, போலீசார் விசாரித்ததற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது. கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் நோக்கி சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதில் நான்கு ஆண்களுடன் ஒரு பெண் மட்டும் பின் இருக்கையில் இருந்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார், அந்த இளைஞர்களை கீழே இறங்க சொல்லி விசாரணை நடத்தினர். காரை ஓட்டி வந்த நபர் பின்னால் இருக்கும் பெண் அவருடைய மனைவி என்று கூறி உள்ளார். உடனே காவலர் அதற்கான ஆதாரத்தை காட்டுமாறு கூறி உள்ளார். உடனே போலீசாரிடம் அந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்