வேலைக்கு சென்ற மகன் மாயம்... கேரளாவில் மீட்ட போலீசார்... நிலையை கண்டு ஷாக்கில் உறைந்த தாய்
விரிவிளை பகுதியில் வசித்து வரும் ராஜகுமாரி என்பவரின் இளைய மகன் விஷ்ணு. கடந்த 8 ம் தேதி வேலைகளுக்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியேறிய அவர், வீடு திரும்பவில்லை. வேலைக்கு சென்ற இடத்தில் விசாரித்தபோது, பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். பல இடங்களிலும் தேடி மகன் கிடைக்காததால், போலீசில் ராஜகுமாரி புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கேரள மாநிலம் திருவனந்தபுரம் சரல்முக்கு பகுதியில், அடையாளம் தெரியாத அளவில் மொட்டைத் தலையுடன் சுற்றித் திரிவதாக போலிசுக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், வேலைக்கு செல்லாமல் திருவனந்தபுரம் சென்று சுற்றியதாகவும், பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றியதாகவும் தெரிவித்துள்ளார். மொட்டை அடித்ததற்கான காரணம் குறித்து பதில் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்துள்ளார். இதையடுத்து, அவரது தாயாரை அழைத்து பத்திரமாக பார்த்துக்கொள்ள அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.