காமராஜர் தொலைநோக்கு பார்வையில் உருவான தமிழகத்தின் `தொட்டில்' -திடீர் தடையால் ரத்த கொதிப்பில் மக்கள்

Update: 2024-11-04 06:53 GMT

காமராஜர் தொலைநோக்கு பார்வையில் உருவான தமிழகத்தின் `தொட்டில்' -திடீர் தடையால் ரத்த கொதிப்பில் மக்கள்

ஆசியாவிலேயே மிக உ யர தொட்டிப்பாலமான மாத்தூர் தொட்டிப் பாலத்தில் செல்ல விதிக்கப்பட்ட தடை, மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு நீக்கப்பட்டிருக்கிறது. இது குறித்தான ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் விரிவாக..

115 அடி உயரத்திலும், ஒரு கிலோ மீட்டர் நீள பிரம்மிப்பிலும் மக்களை கவர்ந்திழுத்து... கால் நூற்றாண்டு பாரம்பரியம் காத்து நிற்கும் இந்த தொட்டி பாலம்தான் தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம்..

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில் அமைந்திருக்கும் இந்த தொட்டிப்பாலம், அம்மாவட்ட விவசாயிகளின் வளர்ச்சிக்காக கடந்த 1966இல் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜரால் கட்டப்பட்டது...

மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன இந்த தொட்டிப்பாலத்தில் செல்ல , கன்னியாகுமாரி மாவட்ட ஆட்சியர் திடீரென தடை விதித்தது உள்ளூர் மக்களை கடும் அவதிக்குள்ளாக்கி, சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய செய்திருந்தது..

சுமார் 28 தூண்கள் தாங்கி நிற்கும் இந்த தொட்டிப்பாலத்தில், சில தூண்கள் விரிசல் அடைந்து சேதமடைந்திருப்பதாகவும் , பாலத்தின் இரு பக்க தடுப்புகள் பாழடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது..

மேலும், கடந்த சில மாதங்களில் பலர் இந்த பாலத்தில் இருந்து தவறி விழுந்தும், தற்கொலை செய்தும் உயிரிழந்திருக்கும் நிலையில், இதுபோன்ற காரணங்களால் மக்களின் பாதுகாப்பிற்காக தொட்டிப்பாலத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது..

இதனால் தண்ணீர் செல்லும் கால்வாய்க்குள், ஆபத்தான முறையில் பள்ளி மாணவிகள் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

தங்களின் வாழ்வாதரத்துடன் ஒன்றி, பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்த தொட்டிப்பாலத்திற்கான தடையை நீக்குமாறு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வறுபுறுத்திய நிலையில், பாலத்திற்கான தடை நீக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்