சரியாக 2 நாளில் திருமணம்.. CCTV-ல் அம்பலமான மணமகனின் சுயரூபம்.. திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
கன்னியாகுமரி மாவட்டத்தில், மாயமான 2 சிறுமிகளில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கறிஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது இரு மகள்களை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், 4 தனிப்படை அமைத்து, மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, இளைஞர் ஒருவருடன் 2 சிறுமிகள் பைக்கில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சிசிடிவியில் சிக்கிய இலுப்பக்கோணம் பகுதியை சேர்ந்த சிவசேனா கட்சி மாநில பொதுச்செயலாளர் ராஜனின் மகன் வழக்கறிஞர் அஜித்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 2 சிறுமிகளில் ஒருவரை தனது அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததை வழக்கறிஞர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுமிகளை நெல்லையில் வைத்து போலீசார் மீட்டனர். 2 சிறுமிகளும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அஜித்குமார், காவல் நிலையத்தில் கழிவறைக்குச் சென்றபோது வழுக்கி விழுந்ததால் கை முறிந்து விட்டதாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.
கைதான வழக்கறிஞர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார், 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அஜித்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கைதான வழக்கறிஞர் அஜித்குமாருக்கு, இரு தினங்களுக்கு முன் நடைபெற இருந்த திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.