காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்.. கர்நாடக துணை முதல்வர் சிறப்பு ஹோமம்!

Update: 2025-01-10 02:57 GMT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சாமி தரிசனம் செய்தார். ஒருநாள் பயணமாக தமிழகம் வந்த சிவக்குமார், கும்பகோணத்தில் உள்ள பிரித்திங்கரா தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் சென்ற அவர், வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு யாகங்கள் செய்து தனது நேர்த்திக்கடனை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை திட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்