"இதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தது" - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் X தள பதிவு
"இதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தது" - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் X தள பதிவு
மக்களுக்கு சேவை செய்ய தன் வாழ்வை அர்ப்பணித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், லட்சியங்களால் வழிநடத்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களை மேம்படுத்தவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஜெயலலிதா அயராது பாடுபட்டார் என குறிப்பிட்டுள்ளார். அவரது நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.