தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டம்

Update: 2025-03-23 11:59 GMT

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர்.

500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்