சென்னையில் ட்ரக் பஸ்ட் - பின்னணியில் ஐடி ஊழியர் | Chennai | IT Employee | TN Plolice | Thanthi TV

Update: 2024-11-13 04:02 GMT

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்திய அஸ்வின் பிர்னால்டு மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுக்கு மெத்தபெட்டமைன் போதை பொருளை வினியோகம் செய்த பிரதீப்பை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 4 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர். அதேபோல் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சாபுதீன் என்பவருக்கும் போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. சாபுதீனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 23 கிராம் எடையுள்ள கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்