விண்வெளியில் இஸ்ரோ படைக்கபோகும் புதிய சாதனை - வியந்து பார்க்கும் உலகம்.. வெளியான அப்டேட்
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ், இரண்டு செயற்கைக் கோள்களை ஒருங்கிணைக்கும் பணிகள் வெள்ளியன்று முதற்கட்டத்தை எட்டும் என, இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்கலங்களின் அதீத சுழற்சி கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், சுழற்சி மெதுவாக குறைக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது. ஏற்கெனவே 7 மற்றும் 9ம் தேதிகளில் மிஷன் டாக்கிங் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஒத்திவைப்புகளுக்கு இந்த அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.