போக்கு காட்டிய ஃபெங்கல் புயல் - உள்ளே நுழைந்த இஸ்ரோ | Fengal Cyclone | ISRO | EOS Satelite
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ அனுப்பிய எர்த் ஆர்பிட்டிங் சேட்டிலைட் EOS மூலம் கடல் காற்றின் வேகம் மற்றும் தன்மை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்சாட் 3டிஆர் செயற்கைக்கோள் மூலம் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தீவிரம் மற்றும் நகரும் திசை ஆகியவற்றை கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் அதிநவீன சேட்டிலைட் தரவுகள் மூலம், எளிதில் கணித்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை உரிய நேரத்தில் செய்ய ஏதுவாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.