"இர்பான் செய்தது ஒன்றும் கொலைக் குற்றமில்லை.." அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Irfans View
தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் இர்பான் செய்தது ஒன்றும் கொலைக் குற்றமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நிதியுதவியுடன் 13 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கருவி மூலம் 20 நிமிடங்களில் ஸ்கேன் எடுக்க முடியும் என தெரிவித்தார். மேலும் முதல்வரால் திறக்கப்பட்ட 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் மருத்துவர்கள் பணி நேரத்தில் பணியில் இல்லை என்றால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.