இரவில் கதவை தட்டிய வடமாநில இளைஞர்... `பெண் வெளியே வந்ததும்...' மின்கம்பத்தில் கட்டி வைத்ததால் அதிர்ச்சி
உப்பரதமன்றப்பள்ளி கிராமத்தில் 2 வடமாநில இளைஞர்கள் நள்ளிரவில் சுற்றித் திரிந்தனர். இருவரும் நகை பறிக்கும் நோக்கத்தில், ஒரு வீட்டின் கதவை தட்டி, அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்ணின் கழுத்தை நெறித்தாக கூறப்படுகிறது. அவர் சப்தம் போட்டதால் எழுந்து வந்த அவருடைய மகன், 2 வடமாநில இளைஞர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளார். பின்னர் அந்த இளைஞரை கிராம மக்களுடன் சேர்ந்து, மின்சார கம்பத்தில் கட்டி வைத்து விட்டு, உத்தனப்பள்ளி போலீசார் தகவல் அளித்துள்ளனர். நள்ளிரவில் அங்கு சென்ற போலீசார், அந்த வடமநில இளைஞர் திருட வந்தவர்போல் இல்லை எனக்கூறி, அவரை விட்டு விடுமாறு கூறி விட்டுச் சென்றனர்.
இதனையடுத்து கிராம மக்ககளும், உள்ளூர் இளைஞர்களிடம் வடமாநில இளைஞரிடம் விசாரித்தபோது, அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததது. இரவு நேரத்தில் வீட்டின் கதவை தட்டியது ஏன் என்று பொதுமக்கள் கேட்டதற்கு அவர் பதில் ஏதும் கூறிமால் இருந்தார். நீண்ட நேரத்திற்குப் பிறகு. அந்த வடமாநில இளைஞரை பொதுமக்கள் அவிழ்த்து விட்டனர்