சேலத்தில் மாநில அளவிலான மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது... துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளுக்காக சேலம் மாவட்ட திமுகவின் தொழிலாளர் அணி சார்பில் மாநில அளவிலான மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். மேலும் வெற்றி பெற்ற குதிரைகள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும், வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கும் கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டன.