ஹெல்மெட் இல்லாமல் நோ என்ட்ரியில் என்ட்ரி கொடுத்த நபர்.. மடக்கி பிடித்த போலீஸ்..
ஈரோட்டில் அபராதம் விதித்த போலீசாரிடம், வாகன ஓட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மத்திய பேருந்து நிலையம் அருகே, போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, No Entryல் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டியை தடுத்து நிறுத்திய போலீசார், அவருக்கு ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.