ஆளுநரை கண்டித்து போராட்டம் - திமுகவினர் மீது வழக்கு பதிவு | DMK | Protest | Governor RN Ravi

Update: 2025-01-08 02:25 GMT

சென்னை சைதாப்பேட்டையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்படுவதாக குற்றம் சாட்டிய தி.மு.க. ஆளுநரை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது. இதன்படி, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் பார்க் அருகே தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, துணை பொது செயலாளர் கனிமொழி உள்ளிட்ட ஏராளமானோர் ஆளுநரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்