மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - அமைச்சர் சொன்ன நல்ல சேதி

Update: 2024-02-21 05:09 GMT

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - அமைச்சர் சொன்ன நல்ல சேதி

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நல்ல பதில் கிடைக்குமென, அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில அலுவலகத்தை, சென்னை சைதாப்பேட்டையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டியில் கட்டப்பட்டுள்ள முதியோர்களுக்கான தனி மருத்துவமனையை, பிரதமர் மோடி வரும் 25ந் தேதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கவுள்ளதாக கூறினார். மேலும், இனி மருத்துவத்துறையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்