காய்கறிகள் வாங்கும் போது இத கவனிச்சு வாங்குங்க... உயிருக்கே உலை வைக்கும் மெகா மோசடி

Update: 2024-08-19 08:46 GMT

காய்கறிகள் வாங்கும் போது இத கவனிச்சு வாங்குங்க... உயிருக்கே உலை வைக்கும் மெகா மோசடி

சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டுகள் விற்கப்படும் சம்பவம் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது...எங்கு நடந்தது?...என்ன நடந்தது?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

தங்கம் விலைக்கு நிகராக வெள்ளைப்பூண்டு விலை ராக்கெட் வேகத்தில் சர்ரென ஏறி விட்டது...

இதைப் பயன்படுத்தி சமையலுக்கு இன்றியமையாத வெள்ளைப்பூண்டை பேராசை பிடித்த வியாபாரிகள் சிலர் போலியாக விற்று வருகின்றனர்...

பிளாஸ்டிக் என்றாலோ...காகிதம் என்றாலோ...எடை பார்க்கும்போது எளிதில் தெரிந்து விடும் அல்லவா...

அதனால் தான் அவர்கள் சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்...

மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரத்தில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது...

கள்ளச்சந்தை கும்பல் சில்லறை வியாபாரிகள் மூலம் இந்த சிமெண்ட் வெள்ளைப்பூண்டுகளை விற்பனை செய்கின்றனர்...

பலரும் இதை சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டுகளை நம்பி வாங்கிச் சென்று உரிக்கும்போது தான் உண்மை வெளிவருகிறது...

வெளியில் இருந்து பார்த்தால் கண்டிப்பாக வித்தியாசம் தெரியாது...

மகாராஷ்டிராவில் ஒருகிலோ வெள்ளைப்பூண்டு பல ஊர்களில் கிலோ 350 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில்...

சந்தைகளில் விற்கப்படும் விலையை விட... விலை குறைவாக விற்கப்படுவதால் மக்களும் நம்பி அதிகம் வாங்கி கடைசியில் ஏமாந்து போகின்றனர்...

மக்களின் உயிருக்கே உலைவைக்கும் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பலைக் கண்டறிந்து அதிகாரிகள் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்