சென்னையை திடுக்கிட வைத்த போலி போலீஸ்... சிக்கியவருக்கு நேர்ந்த கதி

Update: 2024-02-14 10:17 GMT

சென்னை, கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். 24 வயதான இவர், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன் நண்பர் ஒருவருக்கு 10 லட்ச ரூபாய் பணத்தை கடன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்பணத்தை அந்நண்பரிடம் இருந்து வாங்கி வருமாறு தன் மைத்துனர் ஒருவரை மணிகண்டன் அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன்படி, 10 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வியாசர்பாடி எருக்கஞ்சேரி மேம்பாலம் அருகே வந்த மணிகண்டனின் மைத்துனரை, போலீசார் எனக்கூறி நால்வர் வழிமறித்துள்ளனர். தொடர்ந்து 10 லட்ச ரூபாய் பணத்தை பறித்து, அதற்கு ஆவணங்கள் கேட்பது போல் நாடகமாடிய நால்வரும், பணத்துடன் தப்பிச்சென்ற நிலையில் அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் மைத்துனர் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்