ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி - விடுதிகளில் முன்பதிவு செய்வோர் அதிகரிப்பு | Erode Election | Thanthi TV

Update: 2025-01-10 02:44 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் முன் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என பல முனைப்போட்டி நிலவி வருகிறது. இதனால், அந்தந்த கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஈரோடு வரவுள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மேட்டூர் சாலை, சக்தி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகளில், முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 20 நாட்களுக்கு விடுதிகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்