ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம், 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது.
ஆனால், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை உள்ளிட்ட அரசு விடுமுறை காரணமாக இன்றும்,13 மற்றும்17ம் தேதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 53 வாக்குப்பதிவு மையத்தில் உள்ள 237 வாக்குச்சாவடியில், 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன.
வேட்பு மனு தாக்கல் செய்ய காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.