நள்ளிரவில் திடீரென பற்றி எரிந்த தீ.. கரிக்கட்டையான பல லட்சம்.. ஈரோட்டில் அதிர்ச்சி

Update: 2024-12-11 09:10 GMT

ஈரோடு சென்னிமலையில் மரச்சாமான்கள் கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... ஈங்கூர் சாலை திருநகர் பகுதியில் மகேந்திரன் என்பவரது மர சாமான்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட இத்தீவிபத்தில், தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட 20 பேர் 3மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்...

அக்கடை அருகிலேயே பெட்ரோல் பங்க் இருந்ததால் உடனடியாக பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. அதேபோல் சென்னிமலை நகரம் முழுவதும் மின்சப்ளையும் நிறுத்தப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்