அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், அவரது மனைவி ராதா தங்களது உறவினர்களுடன் சர்க்கரை பொங்கல் வைத்து முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து படையலிட்டு அனைவருக்கும் வழங்கி பொங்கல் திருநாளை கொண்டாடினார். எடப்பாடி பழனிசாமி ஓமலூர் அருகே தைப்பொங்கல் திருவிழாவில் பங்கேற்ற நிலையில், அவரது மனைவி, தங்கள் உறவினர்களோடு பொங்கல் திருநாளை கொண்டாடினார்.