ஏரி, குளம், கண்மாய்களில் இனி இப்படி செய்தால் ஜாமினில் கூட வெளிவர முடியாது

Update: 2024-08-24 05:15 GMT

நெல்லை மாவட்டத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது பிணையில் வெளியே வர முடியாத வகையில் குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு, துறை சார்ந்த அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது, பிணையில் வெளியே வர முடியாத வகையில் குற்ற வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான தகவலை, மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்