"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு?" - தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் திட்டவட்டம்

Update: 2025-01-08 02:10 GMT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு சதவிகிதத்தில் முறைகேடு நடக்க சாத்தியமே இல்லை என்று, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை 99 கோடியை எட்டி இருப்பதாகவும், அது விரைவில் 100 கோடியை நெருங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

EVM-ல் நம்பகத்தன்மை இல்லாமை அல்லது குறைபாடு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும்,

EVM-ல் வைரஸ் அல்லது Bug புகுத்துவது பற்றிய கேள்விக்கே இடமில்லை என்றும் கூறினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செல்லாத வாக்குகள் மற்றும் மோசடிக்கான கேள்விக்கும் இடம் இல்லை என்றும்,

பல்வேறு உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இதனை பலமுறை உறுதி செய்துள்ளதாக கூறினார்.

வாக்கு எண்ணிக்கைக்கு மிக பாதுகாப்பான சாதனமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திகழ்கிறது என்றும்,

எனவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது என்றும்,தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்