காலையிலேயே பரபரப்பாகிய ரெய்டு... சென்னையில் சல்லடை போடும் ED... CRPF வீரர்கள் குவிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயபடும் ஓபிஜே மற்றும் பி விண்ட் எனர்ஜி நிறுவனங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில் சோலார் மற்றும் காற்றாலைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பண பரிமாற்றங்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் உதவியுடன் ஐந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள
அரவிந்த் குப்தா என்பவரின் வீட்டில் ஒரு
சிஆர்பிஎப் காவலர் உதவியுடன் ஆறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தேனாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கௌசிக் என்பவரின் வீட்டில் 4 அமலாக்கத்துறை
அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சைதாப்பேட்டையில் உள்ள ஓ.பி.ஜி பவர் அண்ட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்ச்சர் என்ற சோலார் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆந்திரா,
செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.