ECR ரூட்டில் மேலும் 2 புதிய டோல்கேட்கள்.. பர்ஸ் பஞ்சராக போவது உறுதி.. வெயிட்டா எடுத்துட்டு போங்க
கிழக்கு கடற்கரை சாலையில் மேலும் 2 சுங்கச் சாவடிகள் திறக்கப்பட உள்ளதால், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்வதற்கு இனி அதிக செலவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது .
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், விழுப்புரம், மயிலாடுதுறை வழித்தடத்தில், 179 கிலோ மீட்டர் நீள E.C.R சாலையை, 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ECR சாலையில கங்காரம்பாளையம் மற்றும் கொத்ததையில் இரண்டு புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க உள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் மொத்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்த்தப்படுகிறது.
ஜீப்கள், வேன்கள் மற்றும் இதர இலகுரக மோட்டார் வாகனங்கள் ஒரு வழி பயணத்திற்கு, கொத்ததை சுங்கச்சாவடியில் 125 ரூபாய் செலுத்த
வேண்டும்.
இலகு ரக வர்த்தக வாகனங்கள், மினி பஸ்களுக்கு கட்டணம் 200 ரூபாயாகவும், பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு 425 ரூபாய் கட்டணமும் விதிக்கப்படுகிறது.
கங்காரம்பாளையம் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் இதர இலகு ரக வாகனங்கள் ஒருவழியாக செல்ல 60 ரூபாய் செலுத்த வேண்டும்.