செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில், இடுப்பளவு உயரத்தில் மழைநீர் வடிகால் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவளத்தில் உள்ள செங்கேணி அம்மன் கோவில் தெருவில், மழைப்பொழிவு முடிந்த பின்பும் வீடுகளின் முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகாலுடன் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தரையில் இருந்து சுமார் 5 அடி உயரத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மழைநீர் வீடுகளில் புகும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.