எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளாக இருந்த அரசு சாரா ஒப்பந்த பணியை ஓராண்டாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிப்பை வரவேற்றுள்ள மருத்துவர்கள் சங்கம், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. ஒப்பந்த பணிக்காலத்தை குறைத்ததன் மூலம் தமிழக மருத்துவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... பயிற்சி முடித்தவுடன் தனியார் மருத்துவமனையில் பலர் சேர்ந்து விடும் நிலையில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவதால், இதனை போக்க, விருப்பப்படும் முதுநிலை மருத்துவர்களை பணியில் தொடர வைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள் குறைக்கப்படுவதோடு, அரசு விரைந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள எளிமையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நிரந்தர வேலைவாய்ப்பை செய்து தர வேண்டும் எனவும் மருத்துவ மாணவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.