ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 2 முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதண்டம் வயது முதிர்வால் தனது 99 வயதில் உயிரிழந்தார். சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த கோதண்டம் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். கோதண்டம் உடலுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.