ஆன்லைன் லாட்டரியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

x

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கராஜா என்ற 22 வயது இளைஞர். சென்னை திருவொற்றியூர் பகுதியில் நண்பர்களுடன் தங்கி, தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பேஸ்புக் லிங்க் மூலம் கேரள லாட்டரி வாங்க லிங்கை அழுத்தியவுடன் அவர் வங்கி கணக்கில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து விட்டனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த மாணிக்கராஜா வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிறால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற நண்பர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது மாணிக்கராஜா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணிக்க ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்