இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு சாலை மறியலில் குதித்த உறவினர்கள்... தர்மபுரியில் பரபரப்பு
ஒட்டப்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்பவரின் மனைவி நந்தினி பிரசவ வலி காரணமாக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் இருந்த 2 குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே குழந்தைகள் இறப்புக்கு காரணமாக தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.