3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஓட்டுநரை தட்டி தூக்கிய போலீஸ்.. தர்மபுரில் பெரும் பரபரப்பு

Update: 2024-12-31 15:42 GMT

நல்லம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுமிகளின் பெற்றோர் அதியமான் கோடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், பெருமாள் என்ற ஓட்டுநர், 3 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து பெருமாளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெருமாளுக்கு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில், அவர் அந்த பகுதியில் அடிக்கடி மது அருந்தி விட்டு பொதுமக்களிடம் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த ஓராண்டிற்கு முன் பெண் ஒருவரிடம் அத்துமீறி பாலியல் தொல்லை செய்ததாக பெருமாள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, 3 சிறுமிகளின் பெற்றோர், சைல்ட் ஹெல்ப்லைனிலும் புகார் கொடுத்துள்ளதால், சைல்ட் ஹெல்ப்லைன் அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்