"யாரு எப்படி போனா நமக்கு என்ன..?" வெள்ளத்தில் மீன் பிடிக்கும் சிறுவர்கள் |
தர்மபுரி அருகே உள்ள பிடமனேரி பகுதியில் உள்ள ஏரியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் ஏரி நிரம்பி வழிகிறது.இதனால் விளநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து செல்கிறது.இதனால் ஏரியில் உள்ள மீன்கள் சாலையில் நீந்தி செல்வதால் சிறுவர்கள் உடைகளை வலையாக பயன்படுத்தி மீன்களை பிடித்து வருகின்றனர்.