கொட்டி தீர்த்த பேய் மழை..! அப்படியே முறிந்து விழுந்த மின்கம்பம்.. தருமபுரியில் பரபரப்பு | Dharmapuri
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி
அருகே உள்ள வேப்பாடி ஆற்றில், கன மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அருகே இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. இந்த மின் கம்பம் ஏற்காடு செல்லும் சாலையில் விழுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இவ்வழியாக அன்றாட தேவைகளுக்காக செல்லும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். மின் வாரியத் துறையினர் மின் கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்