"எல்லாமே வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போயிடுச்சு.. சாப்பிடக்கூட வழியில்லை" - கண்ணீரோடு கதறும் மக்கள்
அரூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து செல்லப்பட்டதாக பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியதால், தென்பெண்ணை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அம்மாபேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சென்னம்மாள் கோயில் பாதி அளவு மூழ்கியுள்ளது. மேலும், கோயில் அருகே 20க்கும் மேற்பட்ட கடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்துவிட்டதாக மக்கள் குமுறுகின்றனர்.